பொது செய்தி

தமிழ்நாடு

பீகாருக்கு 7வது ரயில் இயக்கம்

Added : மே 21, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூரில் இருந்து பீகாருக்கு நேற்று, 7வது ரயில் புறப்பட்டது; 1,464 பேர் பயணித்தனர்.கடந்த, 12ம் தேதி முதல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் அவரவர் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதிக பட்சமாக பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அம்மாநிலத்துக்கு செல்ல விண்ணப்பித்துள்ளதால், ஆறு ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று மதியம், 1:30 மணிக்கு மீண்டும் பீகார், சிட்மர்ஹிக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது.முன்னதாக, ஜெய்வாபாய் பள்ளியில், 1,464 பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, வருவாய்த்துறையினர் மூலம் உணவு வழங்கப்பட்டது. நேற்று வரை பீகாருக்கு, ஏழு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது; 10 ஆயிரத்து, 248 பேர் அம்மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X