அனுப்பர்பாளையம்:திருப்பூரில் பாத்திர உற்பத்தி தொடங்கியது. ஆனால், மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் உற்பத்தியாளர்கள் திணறி வருகின்றனர்.அனுப்பர்பாளையம், வேலம்பாளையம், செட்டிபாளையம், அங்கேரிபாளையம், காளம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் 250 பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. தினமும், எவர் சில்வர், பித்தளை, செம்பு, ஆகிய உலோகங்களில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாத்திர உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
கொரோனா ஊரடங்கால், பாத்திர உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டது. தற்போது அரசு பல்வேறு கட்டுபாடுகளுடன் தொழில் துவங்க அனுமதி வழங்கி உள்ளது. இதனால், பாத்திர உற்பத்தி துவங்கியது.இது குறித்து, பாத்திர உற்பத்தியாளர்கள் கூறியதாவது:பாத்திர உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களில் தகடு குஜராத் மாநிலத்தில் இருந்து வருகிறது. வெல்டிங் வைக்க தேவையான கார்பைடு கல் புதுக்கோட்டை, காரைக்கால், பாண்டி, உள்ளிட்ட இடங் களில் இருந்தும் பாலீஸ் செய்ய தேவையான சல்பர் மதுரை மாவட்டத்தில் இருந்து வருகிறது.இவ்வாறு ஒவ்வொரு மூலப்பொருட்களும் ஒவ்வொரு இடத்தில் இருந்து, வருகிறது.
தற்போது தொழில் துவங்க அரசு அனுமதி கொடுத்துள்ளது.ஆனால், போக்குவரத்து வசதி இல்லை. மூலப்பொருட்களை எப்படி கொண்டு வருவது. இதன் காரணமாக, 65 சதவீத பட்டறைகளே இயங்குகிறது.மேலும், போக்குவரத்து பிரச்னையால் பொருட்களை அனுப்பி வைப்பது. அதற்குறிய பணத்ணதை பெறுவதில் சிக்கல் உள்ளது. போக்குவரத்து சீரான பிறகே முழுமையான பாத்திர உற்பத்தி இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE