பொது செய்தி

தமிழ்நாடு

மின் கட்டணம் 'டபுள்' :பொதுமக்கள் 'ஷாக்'

Added : மே 21, 2020
Share
Advertisement

திருப்பூர்:ஊரடங்கால், தமிழகத்தில், கடந்த இரு மாதங்களாக, மின் கணக்கீடு நடைபெறவில்லை. தற்போது, மின் கணக்கீடு, வீடு தோறும் நடக்கிறது.மின் நுகர்வோர் சிலர் கூறியதாவது:நான்கு மாதங்களுக்கான மின் பயன்பாட்டு அளவு, ஒரே நேரத்தில் கணக்கிடப்படுகிறது. யூனிட் எண்ணிக்கை அதிகரிப்பால், சிலாப் முறைப்படி, இரண்டு மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது.குறிப்பாக, 250 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில், தற்போது 500 யூனிட்டுக்கு மேல் வரும்போது, அதற்கான கூடுதல் கட்டணம் கணக்கிடப்படுகிறது. நுாறு யூனிட் இலவச மின்சாரம் பயன்படுத்துவோர், இருநுாறு யூனிட் பயன்படுத்தியிருந்தால், கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.ஊடரங்கால் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மக்களுக்கு, மின் கட்டணம் சுமையை அளிக்கும். கொரோனா அச்சுறுத்தலுக்கு முன், மக்கள் செலுத்தியபடி மின் கட்டணம் தனியாக கணக்கிட்டு வசூலிக்க வேண்டும்.இவ்வாறு, மின் நுகர்வோர் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X