மஹாராஷ்டிரா சட்டமேலவையின் கோடீஸ்வர எம்.எல்.சி., உத்தவ்

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிரா சட்டமேலவை உறுப்பினராக தேர்வு பெற்ற முதல்வர் உத்தவ் தாக்கரே சொத்து மதிப்பு ரூ. 142 கோடி என வேட்புமனுவில் தெரியவந்துள்ளது.மஹாராஷ்டிரா மாநில முதல்வராக பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆகி உள்ள நிலையில் உத்தவ் தாக்கரே சட்ட மேலவை உறுப்பினராக கடந்த சில தினங்களுக்கு முன் போட்டியின்றி தேர்வு பெற்று பதவி ஏற்றார். அவருடன் பிற கட்சியின் உட்பட 9 பேர் மேலவை
maharashtra news, uddhav thackrey, mumbai news, politics

மும்பை: மஹாராஷ்டிரா சட்டமேலவை உறுப்பினராக தேர்வு பெற்ற முதல்வர் உத்தவ் தாக்கரே சொத்து மதிப்பு ரூ. 142 கோடி என வேட்புமனுவில் தெரியவந்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநில முதல்வராக பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆகி உள்ள நிலையில் உத்தவ் தாக்கரே சட்ட மேலவை உறுப்பினராக கடந்த சில தினங்களுக்கு முன் போட்டியின்றி தேர்வு பெற்று பதவி ஏற்றார். அவருடன் பிற கட்சியின் உட்பட 9 பேர் மேலவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.


latest tamil newsபோட்டியின்றி தேர்வானர்கள் தங்களது வேட்புமனுவில் அசையும், அசையா சொத்து மதிப்பு குறித்த விவரங்களை அளித்தனர். இதில் மிகவும் பணக்கார எம்.எல்.சி., யாக முதல்வர் உத்தவ் தேர்வு பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஜனநாயகத்திற்கான சீர்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், மஹாராஷ்டிரா சட்டமேலவைக்கு வேட்புமனு தாக்கலின் போது தங்களது சொத்து மதிப்பு குறித்து விவரத்தை தெரிவித்தவர்களில் முதல்வர் உத்தவ் தாக்கரே தனது அசையும் சொத்து மதிப்பு ரூ.61,89,57,433 கோடி எனவும், அசையா சொத்து ரூ.81,37,17,320 கோடி என மொத்தம் ரூ.143,26,74, 763 கோடி தெரிவித்துள்ளார். இதன் மூலம் மிகவும் கோடீஸ்வர எம்.எல்.சி., வேட்பாளர் உத்தவ் என தெரியவந்துள்ளது.

இவருக்கு அடுத்தபடியாக பா.ஜ. வேட்பாளர் ரஞ்சித்சிங் மொஹித்பாட்டீல் தனது அசையும் சொத்து மதிப்பு ரூ.17,68, 26,081 எனவும், அசையா சொத்து மதிப்பு ரூ. 32,53,36,515 என மொத்தம் 50,21,62,696 என தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த செய்தியில் தெரியவந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
21-மே-202007:44:27 IST Report Abuse
VENKATASUBRAMANIAN These people are talking about Modi.
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
21-மே-202004:59:50 IST Report Abuse
s t rajan ஆட்சிக்கு வருமுன்னேயே இத்தனை கோடிகளா ? அரசியல் ஒரு மூலதனம் இல்லாத அட்சய பாத்திரமா ? இப்படி கோடீசுவரர்கள் தான் நம்மை ஆளுவார்களா ? அப்படியென்றால் ஏழைகள் பிச்சைக்காரர்களாகவே இவர்கள் போடும் இனாம்களை பொறுக்கித் தான் வாழ வேண்டுமா? இந்த தேர்தல் ஆணையம், நீதிமன்றம் போன்றவைகள் இதை வேடிக்கைப் பார்க்கும் gallery களா ?
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
21-மே-202001:57:31 IST Report Abuse
s t rajan ஏழைப் பங்காளனே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X