மிரட்டும் கந்து வட்டி கும்பல்... வசூல் ராஜாக்கள் : பொதுமக்கள் அச்சம்

Added : மே 21, 2020
Share
Advertisement
திருப்பூர்:ஊரடங்கு காலத்தில் முடங்கிய மக்கள், கந்து வட்டிக்கு பணம் வாங்கி சிரமப்படுகின்றனர். கந்து வட்டி கும்பல், வீட்டுக்கே வந்து மிரட்டுவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.கடந்த மார்ச் 24 முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, வரும் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி முதல், பின்னர் 17ம் தேதிக்குப் பின்பும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தொழிற்சாலைகள்

திருப்பூர்:ஊரடங்கு காலத்தில் முடங்கிய மக்கள், கந்து வட்டிக்கு பணம் வாங்கி சிரமப்படுகின்றனர். கந்து வட்டி கும்பல், வீட்டுக்கே வந்து மிரட்டுவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.கடந்த மார்ச் 24 முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, வரும் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி முதல், பின்னர் 17ம் தேதிக்குப் பின்பும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தொழிற்சாலைகள் இயங்கத் துவங்கியுள்ளன.
இருப்பினும், ஊரடங்கு காலத்தில், பின்னலாடை, விசைத்தறி உட்பட பல்வேறு தொழிற்கூடங்கள் முழுமையாக செயல்படவில்லை.ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், வாரக்கூலியை நம்பி வாழ்வாதாரத்தை நடத்துபவர்களாக உள்ளனர்.அரசின் நிவாரணம், இலவச அரிசி உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தபோதும், கூலி மற்றும் சம்பளம் கிடைக்காததால், அன்றாடச் செலவுக்குப் பணம் இல்லாமல், தொழிலாளர்கள் பலர் தவித்து வருகின்றனர்.இவர்கள் பணிபுரிந்துவந்த தொழிற்கூட நிர்வாகத்தினர் பலர், பணம் கொடுத்து உதவியபோதும், அந்தப்பணம் போதுமானதாக இல்லை.இதனால், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர், கந்துவட்டிக்கு கடன் பெற்றுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்கள் சிலர் கூறியதாவது:கடன் வாங்கும் முன்பே, பத்து சதவீதம் வரை, பணத்தைக் கழித்துவிட்டுத் தான் கடன் பெற்றோம். செலவுக்குப் பணம் இல்லாததால், வேறு வழியில்லை. இத்தனைக்கும், நகை, பொருட்கள், வீட்டுப்பத்திரம் உள்ளிட்டவற்றை அடகு வைத்துத்தான் பலரும், பணம் பெற்றிருக்கிறோம்.தற்போது, வட்டி, அபராத வட்டி எனக் கேட்கின்றனர்.
மாதம் ஐந்து முதல் 10 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றனர். 'இன்னும் வேலைக்கே செல்லவில்லை; எங்கிருந்து பணம் கொடுப்பது' என்று கேட்டால், 'அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது' என்று கூறி மிரட்டுகின்றனர்.வீடுகளுக்கே வந்து மிரட்டுவதால், கேவலமாகவும், பயமாகவும் உள்ளது. அடகு வைத்த பொருட்களும் கையை விட்டுப் போய்விடும் நிலை உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இது குறித்து, போலீசார் கூறுகையில், 'கந்துவட்டி கேட்டு மிரட்டினால், போலீஸ் ஸ்டேஷனில் புகார் தரலாம்; நிச்சயம், கந்து வட்டி தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்போம்,' என்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X