பொது செய்தி

தமிழ்நாடு

மின் கட்டணத்துக்கு அவகாசம்

Added : மே 21, 2020
Share
Advertisement

பல்லடம்:மின் கட்டணம் செலுத்துவதற்கு, கால அவகாசம் வழங்க வேண்டும் என, விசைத்தறியாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 2 லட்சத் துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள், ஊரடங்கு காரணமாக இயங்காமல் இருந்தன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், 50 சதவீத விசைத்தறிகளும் இயங்க துவங்கியுள்ளன.தற்போது, மின்கட்டணம் செலுத்த, கால அவகாசம் வழங்க வேண்டும் என, திருப்பூர் கோவை மாவட்ட விசைத்தறியாளர் சங்க தலைவர் வேலுசாமி, மற்றும் செயலாளர் பாலசுப்பிரமணியம், பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த இரண்டு மாதங்களாக தறிகள் இயங்கவில்லை. ஏற்கனவே உற்பத்தி செய்ததற்கான கூலியும் இதுவரை கிடைக்கவில்லை.வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், மின் கட் டணம் செலுத்துவது என்பது கூடுதல் நெருக்கடி.எனவே, விசைத்தறியாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு, விசைத்தறி கூடங்களுக்கு, இரண்டு மாதம் மின் கட்டணம் செலுத்த, கால அவகாசம் வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X