பொது செய்தி

தமிழ்நாடு

'முன் பணத்தை திரும்ப பெறலாம்' மண்டப உரிமையாளர் அறிவிப்பு

Added : மே 21, 2020
Share
Advertisement

அவிநாசி:திருமணம் உட்பட விசேஷங்களுக்கு, மண்ட பம் 'புக்கிங்' செய்தவர்கள், முன் பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என மண்டப உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.அவிநாசி வட்டார திருமண மண்டப உரிமை யாளர்கள் அறக்கட்டளையினர் ஆலோசனைக்கூட்டம், செந்துார் மஹாலில் நடந்தது. சங்க தலைவர் பொன்னுக்குட்டி தலைமை வகித்தார்.செயலாளர் கோவிந்தராஜன், பொருளாளர் பிரபு முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தற்போதுள்ள சூழலில், அனைவருக்கும் ஒரே நேரத்தில் முன்பணத்தை திருப்பித்தர இயலாத நிலையில், உள்ளோம்.பதிவு செய்த திருமணத் தேதியிலிருந்து ஒரு ஆண்டு காலத்திற்குள், தங்கள் உறவினர்கள், நண்பர்களின் சுப நிகழ்ச்சிகளை நடத்தி, முன்பணத்தை சமன் செய்து கொள்ளலாம், அல்லது முன்பண தொகையை, முகூர்த்த தேதியிலிருந்து, 90 நாட்களுக்குள், சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கி விட வேண்டும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X