தமிழ்நாடு

மாஸ்க் அணியாத 502 பேருக்கு ரூ. 59,800 அபராதம்

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
மாஸ்க் அணியாத 502 பேருக்கு ரூ. 59,800 அபராதம்

மதுரை : மதுரை நகரில் மாஸ்க் அணியாத 447 பேர், புறநகரில் 55 பேரிடம் மொத்தம் ரூ.59,800 அபராதம் வசூலிக்கப்பட்டது.ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், மக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மதுரையில் இந்த உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. மக்களில் பலர் மாஸ்க் அணிவதில்லை. இதனால் நகரில் கொரோனா அச்சம் நீடிக்கிறது.

மாஸ்க் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி கமிஷனர் விசாகன் உத்தரவிட்டார்.மண்டல சுகாதார அலுவலர்கள் தலைமையில் ஆங்காங்கே சோதனை நடத்தியதில் 447 பேரும், புறநகரில் 55 பேரும் பிடிபட்டனர். இவர்களுக்கு ரூ.59,800 அபராதம் விதிக்கப்பட்டது.கலெக்டர் வினய் கூறுகையில், ''பொது இடங்கள், பணிபுரியும் இடங்களில் எச்சில் துப்பினால் தண்டனை, அபராதம் விதிக்கப்படும்.

சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்'' என்றார்.மாஸ்க் அணிந்தால்தான் பொருட்கள் விற்பனைஇதற்கிடையே மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் முகக்கவசத்துடன் வருவோருக்கு மட்டும் பொருட்களை விற்க வணிக நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்களுக்கு ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் செல்லத்துரை அறிவுறுத்தியிருக்கிறார்.மீறும் பொது மக்கள், வணிக நிறுவனங்களுக்கு ஒவ்வொரு முறையும் அபராதம் விதிக்க வேண்டும். வணிக நிறுவனங்களுக்கு 'சீல்' வைக்க வேண்டும். இதுகுறித்து தினமும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.Gomathinayagam - chennai,இந்தியா
21-மே-202014:10:10 IST Report Abuse
A.Gomathinayagam those who are buying liquor in TASMAC shops are not maintaining the distance of minimum required . They can also be fined to the tune of RS500/- per person .They are financially capable of paying the fine . the state" coffer will give a boost.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X