பொது செய்தி

தமிழ்நாடு

அதிரடிப்படைக்கு தனி இடம்: ஆர்.டி.ஓ., ஆய்வு

Added : மே 21, 2020
Share
Advertisement

பந்தலுார்:பந்தலுாரில் செயல்பட்டு வரும் அதிரடிப்படையினருக்கு, அய்யன்கொல்லியில் தனி இடம் ஒதுக்கியதையடுத்து, ஆர்.டி.ஓ. நேரடி ஆய்வு செய்தார்.கேரளா மாநிலம் மலப்புரம், பாலக்காடு, வயநாடு மாவட்டங்களில் நக்சல் நடமாட்டம் அதிகரித்து வந்தது. இவர்கள், தமிழக எல்லைக்குள் வராமல் தடுக்கும் வகையில், பந்தலுாரில், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பள்ளி வகுப்பறை கட்டடத்தில், கடந்த, 5 ஆண்டுகளாக அதிரடிப்படை முகாம் செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கு தனியாக முகாம் அமைக்கும் வகையில், அய்யன்கொல்லி பகுதியில் உள்ள அரசு அனாதீன நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதில், 1.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்ட நிலையில், கட்டுமான பணி துவக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், கூடலுார் ஆர்.டி.ஓ. ராஜ்குமார், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர் இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். அங்கு விரைவில், அதிரடிப்படை முகாம் கட்டடம் அமைக்கும் பணி துவக்கப்பட உள்ளது.ஆய்வின்போது, வருவாய் ஆய்வாளர் காமு, வி.ஏ.ஓ. செந்தில், நில அளவையர் முரளி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X