அத்தியாவசிய தேவைகள் பெறுவதில் சிக்கலா

Added : மே 21, 2020
Share
Advertisement

குப்பையை கொட்டுறாங்கமதுரை அச்சம்பத்து ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நகர் பாலத்தையொட்டி குப்பை கொட்டுவதால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. பலமுறை கண்டித்தும், எச்சரித்தும் குப்பை கொட்டுபவர்கள் திருந்துவதாக இல்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அம்பலவாணன், அச்சம்பத்து.கூடுதல் விலைக்கு பலசரக்குகோ.புதுார் பகுதியில் பல பலசரக்கு கடைகளில் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்கிறார்கள். காரணம் கேட்டால் ஊரடங்கால் பொருட்கள் உற்பத்தி இல்லை, தட்டுப்பாடு என்கிறார்கள்.- சுல்தான், புதுார்.'இ - பாஸ்' இணையம் இம்சைசென்னையில் இருந்து அவசர தேவைக்காக மதுரை வந்தேன். மீண்டும் சென்னை செல்ல 'இ - பாஸ்' பெற விண்ணப்பித்தால் இணையதளம் வேலை செய்யாமல் இம்சை கொடுக்கிறது.- சரவணன், மகாத்மாகாந்தி நகர். பஸ் போக்குவரத்து தேவைமதுரை, திருமங்கலம் பகுதியில் இருந்து விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு அரசு ஊழியர்கள் சென்று வர பஸ் போக்குவரத்து தேவை. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.- சிவக்குமார், திருமங்கலம்.எங்களையும் அரசு கவனிக்குமாவீட்டு வேலை பார்க்கும் என்னை போன்ற பணியாளர்களுக்கு அரசு கொரோனா நிவாரண தொகை வழங்காமல் இருப்பது வேதனையை தருகிறது. அரசு எங்களையும் கொஞ்சம் கவனிக்குமா.- மலர்கொடி, சொக்கலிங்க நகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X