பொது செய்தி

தமிழ்நாடு

மானியத்தில் சொட்டுநீர் பாசனம் ;விவசாயிகளுக்கு அழைப்பு

Added : மே 21, 2020
Share
Advertisement

மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில், மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க வேளாண்மைத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.மடத்துக்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி அறிக்கை:சொட்டு நீர் அமைப்பு மூலம் நீர்ப்பாசனம் செய்வது சிறந்த நீர் மேலாண்மை ஆகும். மத்திய மாநில அரசு நிதி உதவி பெறும் பி.எம்.கே.எஸ்.ஒய் திட்டத்தில், 2020 -- 21 நிதியாண்டிற்காக மடத்துக்குளம் பகுதியில், 1,800 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதில், சிறு, குறு விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க, 100 சதவீதம் மானியம் மற்ற விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது. கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு சிறப்பு திட்டமாக கூடுதல் மானியம் முழுமையாக வழங்கப்படுகிறது.சிட்டா அடங்கல், உரிமைச்சான்று, நில வரைபடம், விவசாயி புகைப்படம், ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, சிறு,குறு விவசாயி சான்று ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து விவசாயிகள் பயன்பெறலாம். கூடுதல் தகவல்களுக்கு வேளாண்மைத்துறை அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X