பொது செய்தி

தமிழ்நாடு

பருவமாற்றத்தால் பழ ஈ தாக்குதல்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

Added : மே 21, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில், காய்கறி பயிர்களில் ஏற்பட்டுள்ள பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, தோட்டக்கலை துறையினர் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.பொள்ளாச்சி பகுதியில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பெய்த கோடை மழை காரணமாக, காய்கறி பயிர்களில் பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.குறிப்பாக, காய்கறிகளில் பழ ஈ தாக்குதல் பலத்த சேதம் விளைவிக்கிறது. பழ ஈ தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து தோட்டக்கலை துறை அறிவுரை வழங்கியுள்ளது.பழ ஈக்கள் காய்களை துளைத்து, உள்ளே முட்டையிடும். முட்டையில் இருந்து புது ஈக்கள் உருவானால், எண்ணிக்கை மிகவும் அதிகரித்து, கட்டுப்படுத்துவது கடினமாகி விடும். இதை தவிர்க்க, பூச்சி தாக்குதல் கண்டறியப்பட்ட காய்களை உடனடியாக பறித்து, மண்ணில் புதைத்து அழிக்க வேண்டும்.பூச்சி மருந்து கடைகளில் கிடைக்கும், பழ ஈ கவர்ச்சி பொறிகளை, ஏக்கருக்கு ஐந்து என்ற அளவில் நிறுவி, ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். வெல்லக் கரைசல், 5 மில்லி மற்றும் குளோர்பைரிபாஸ், 5 மில்லி அல்லது நொதித்த பனஞ்சாறு, 100 மில்லி மற்றும் மாலத்தியான், 5 மில்லி கலந்து, மண் பானைகளில் பல இடங்களில் வைத்து, ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.இவை தவிர, அடிக்கடி நீர் பாசனம் செய்தால், மண்ணில் உள்ள பழ ஈக்களின் முட்டைகள் பொரிக்க முடியாமல் அழியும், கூட்டுப்புழு பருவத்தில் உள்ளவை வெளியே வர முடியாமல் பூச்சிகளின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படும்.இவ்வாறு, தோட்டக்கலை துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X