கரையை கடந்தது, 'அம்பான்' புயல் ; மே.வங்கம், ஒடிசாவில் பலத்த மழை

Added : மே 21, 2020
Share
Advertisement
 கரையை கடந்தது, 'அம்பான்' புயல் ; மே.வங்கம், ஒடிசாவில் பலத்த மழை

கோல்கட்டா : சூப்பர் புயல், 'அம்பான்' மேற்குவங்கம் - -வங்கதேசம் இடையே, நேற்று பிற்பகல் கரையை கடந்தது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், 17ம் தேதி தீவிர புயலாக மாறியது. நேற்று முன்தினம், அதி தீவிர புயலாக மாறியது.இதற்கு, அம்பான் என பெயர் வைக்கப்பட்டது. இது, வடக்கு மற்றும் -வடகிழக்கு பகுதியை நோக்கி நகர்ந்து, மேற்கு வங்கத்தின் திஹா மற்றும் வங்கதேசத்தின், ஹத்தியா தீவுகள் இடையே, நேற்று மாலை கரையை கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.மின் கம்பங்கள் சாய்வுஅதன்படி, நேற்று பிற்பகல், 2:30 மணிக்கு, புயல் கரையை கடக்கத் துவங்கியது. புயல் கரையை கடந்த பகுதியில், சுந்தர வனக்காடுகள் இருந்ததால், கரையை கடந்து முடிக்க, நான்கு மணி நேரத்துக்கு மேலானது.

புயல் கரையைக் கடந்த போது, மேற்கு வங்கத்தில், வடக்கு, தெற்கு, 24 பராகனஸ், கிழக்கு மிட்னாப்பூர், கோல்கட்டா, ஹவுரா, ஹுக்ளி மாவட்டங்களில், மணிக்கு, 170 - 190 கி.மீட்டர் வேகத்தில புயல் காற்று வீசியது. மேலும், மேற்கு வங்கத்தில் பல மாவட்டங்களில், தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. காற்றின் வேகத்தில், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. தொலை தொடர்பு இணைப்புகள் பாதிக்கப்பட்டன. பல இடங்களில், மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன. குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன. புயல் கரையைக் கடந்த போது, கடலில், பல மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்ததாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உயிர் சேதம் குறைவு'இது, வங்கக் கடலில், 1999ம் ஆண்டுக்குப் பின் உருவான அதி தீவிர புயல்; பாதிப்பு பெரும் அளவில் இருக்கும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. புயலால், ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. பூரி, குர்டா, ஜகத்சிங்பூர், கட்டாக், கேந்திரபாரா, கஞ்சம், பத்ரக், பாலசோர் மாவட்டங்களில், நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. மேற்கு வங்கம், ஒடிசாவில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும், 6.5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.இரண்டு மாநிலங்களிலும், தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த, 32 குழுக்கள், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

புயல் பற்றி, மேற்கு வங்க மாநில அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புயல் வீசி முடித்து, மழை நின்ற பின் தான், சேதத்தின் மதிப்பு தெரிய வரும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், உயிர் சேதம் குறைவாக தான் இருக்கும்.'மரங்கள் விழுந்ததில், ஹவுராவில் ஒருவரும், வடக்கு, 24 பராகனஸ் மாவட்டத்தில் ஒருவரும் இறந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது' என்றார்.20 லட்சம் பேர் இடமாற்றம்அண்டை நாடான வங்கதேசத்திலும், 'அம்பான்' புயல் பெயரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில், 20 லட்சம் பேர், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், மீட்பு நடவடிக்கைகளில், ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க, பிரதமர், ஷேக் ஹசீனா உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X