பொது செய்தி

தமிழ்நாடு

மானியத்துடன் பண்ணைக்குட்டை: தோட்டக்கலைத்துறை அழைப்பு

Added : மே 21, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:விளை நிலங்களில், 75 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் பண்ணைக்குட்டை அமைத்து பயன்பெற, விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மழை நீர் சேமிப்புக்கு வேளாண்துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தோட்டக்கலைத்துறை சார்பில் மழை நீரை சேமிக்க, விளை நிலங்களில் பண்ணைக்குட்டை அமைக்க மானியமும் வழங்கப்படுகிறது.பொள்ளாச்சி வடக்கு, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வசுமதி அறிக்கை: மழை நீரை சேமிக்க, சிறு குளம் வெட்டுதல், சம உயர வரப்பு அமைத்தல், கசிவு நீர் குட்டை அமைத்தல், தடுப்பணை கட்டுதல் போன்ற உத்திகள் கையாளப்படுகின்றன.இவற்றில், மிகச்சிறந்ததும், மழை நீரை சேமித்து, முழுப்பலனை அளிக்கக்கூடியதாகவும் இருப்பது பண்ணை குட்டைகள் மட்டுமே. தோட்டத்தில் பெய்யும் மழை நீர் வீணாகாமல் சேகரித்து, பயிர் சாகுபடிக்கு பயன்படுத்த பண்ணைக்குட்டைகள் அமைக்கப்படுகிறது. விவசாய நிலத்தில், 60 அடி நீளம், 60 அடி அகலம் மற்றும் 10 அடி ஆழத்தில் பண்ணை குட்டைகள் அமைத்து, அதன்மேல் நீரை தேக்கி வைக்க, 300 மைக்ரான் அடர்த்தியுள்ள பாலித்தீன் 'சீட்' பரப்ப வேண்டும்.இதற்கு, 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. பொள்ளாச்சி பகுதி விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற, 96775 84169, 99420 56460 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X