பொது செய்தி

தமிழ்நாடு

ஊர் திரும்பும் ஆட்டு மந்தை: ஊரடங்கு தளர்வால் பயணம்

Added : மே 21, 2020
Share
Advertisement
 ஊர் திரும்பும் ஆட்டு மந்தை: ஊரடங்கு தளர்வால் பயணம்

பொள்ளாச்சி:கேரளா, பொள்ளாச்சி பகுதி தோட்டங்களில் பட்டி போடப்பட்டிருந்த ஆட்டு மந்தைகள், இரண்டு மாதங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்புகின்றன.பழநி, திண்டுக்கல் பகுதிகளில், ஆடு வளர்ப்பவர்கள், அவற்றை கால்நடையாகவே பொள்ளாச்சி, கேரளா தோட்டங்களுக்கு ஓட்டி வருவர். இங்குள்ள தோட்டங்களில், வாரக்கணக்கில் ஆடுகளை அடைத்து பட்டி போடுவர். ஆடுகளின் கழிவு, சத்து மிகுந்த உரம் என்பதால், தோட்ட உரிமையாளர்கள், ஆட்டு மந்தை உரிமையாளர்களுக்கு பட்டி அமைக்க பணம் கொடுப்பது வழக்கம்.சில மாதங்களுக்கு முன், ஆட்டு மந்தைகளை ஓட்டி வந்தவர்கள், ஊரடங்கு அறிவிப்பால், சொந்த ஊர் திரும்ப முடியாமல் தோட்டங்களிலேயே தங்கி விட்டனர். தற்போது, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, ஓரளவு இயல்பு நிலை திரும்பியுள்ளதால், ஆடுகளை சொந்த ஊருக்கு ஓட்டிச்செல்கின்றனர்.ஆட்டு மந்தை உரிமையாளர்கள் கூறுகையில், 'ஆடுகளின் பாதுகாப்பு கருதி, பிரதான ரோடுகளை தவிர்த்து, கிராம ரோடுகள் வழியே தான் ஓட்டிச் செல்கிறோம். சொந்த ஊர் சென்றடைய ஒரு வாரத்துக்கு மேலாகும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X