போக்குவரத்து பாதிப்பு| Dinamalar

போக்குவரத்து பாதிப்பு

Added : மே 21, 2020
Share
 போக்குவரத்து பாதிப்பு

பொள்ளாச்சி அடுத்த ஜமீன்ஊத்துக்குளியில், ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து பாதிக்கிறது.கே.கனகராஜ்,ஜமீன்ஊத்துக்குளி.சுகாதாரம் பாதிப்புஆனைமலை முக்கோணம் பகுதியில், சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, பல நாட்களாக கழிவுநீர் தேங்கி ரோட்டில் செல்வதால், சுகாதாரம் பாதிக்கிறது.ஆர்.ராம்குமார்,ஆனைமலை.ஓடையில் கழிவு தேக்கம்நெகமம் சந்தை அருகேயுள்ள, ஓடையில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் ஏற்படுகிறது. கழிவுகளை அகற்றி, ஓடையை சுத்தப்படுத்த வேண்டும்.ஏ.பாலு,நெகமம்.இருளில் லட்சுமிநகர்உடுமலை, லட்சுமி நகரில், தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால், இரவில் திருட்டு பயம் அதிகரிக்கிறது.எஸ்.பத்மாவதி,உடுமலை.போக்குவரத்து நெரிசல்உடுமலை, கல்பனா ரோட்டில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எம். தாரணி,உடுமலை.புகையால் மாசுஉடுமலை, வ.உ.சி.,வீதியில் குப்பைக்கழிவுகள் எரிக்கப்படுவதால் பரவும் புகையால் காற்று மாசு ஏற்படுகிறது.எஸ்.விக்ணேஷ்,உடுமலை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X