புதரில் மறைந்த உடற்பயிற்சி மையம்: சமூக விரோதிகளின் கூடாரமானது

Added : மே 21, 2020
Share
Advertisement
 புதரில் மறைந்த உடற்பயிற்சி மையம்: சமூக விரோதிகளின் கூடாரமானது

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில், உடற்பயிற்சி மையம் பராமரிப்பின்றி புதர் மண்டி கிடப்பதுடன், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.கிராமம் மற்றும் நகர்புறங்களில் உள்ள இளைஞர்களின் விளையாட்டுத்திறன்களை மேம்படுத்தும் வகையில், தி.மு.க., ஆட்சியில், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மையம் அமைக்கப்பட்டது.இதனை கிராமப்புற இளைஞர்கள் பயன்படுத்தி, உடற்பயிற்சி, விளையாட்டுப் பயிற்சியும் மேற்கொண்டனர்.அதில், பொள்ளாச்சி நகராட்சி பகுதியில், சேரன் காலனி உள்ளிட்ட பல இடங்களில், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மையம் அமைக்கப்பட்டது.நகரப்பகுதியில், இந்த மையங்கள் பராமரிப்பு இல்லாததால், பெயர் பலகை மட்டுமே தற்போது அடையளமாக உள்ளன.அந்த இடத்தில், முட்புதர் வளர்ந்து யாருக்கும் தெரியாத அளவிற்கு மைதானங்கள் உருமாறியுள்ளன.சேரன் காலனியில், உடற்பயிற்சி மையம் இருந்த இடத்தில் புதர் மண்டி காணப்படுவதால் விஷ பூச்சிகள் அதிகமுள்ளது.மேலும், மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு புகழிடமாக மாறியுள்ளது. சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.நகராட்சி பகுதியில் உள்ள இந்த இடங்களை ஆய்வு செய்து, பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் வசம் இந்த இடங்கள் செல்லாமல் தடுக்க, கம்பி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும். இளைஞர்களின் பயன்பாட்டுக்காக போதிய உபகரணங்களை பொருத்த வேண்டும், என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X