பலத்த காற்றால் சாய்ந்த தென்னை மரங்கள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பலத்த காற்றால் சாய்ந்த தென்னை மரங்கள்

Added : மே 21, 2020
Share

உடுமலை:உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் இரு நாட்களாக பலத்த காற்று வீசி, பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், பாலக்காட்டு கணவாய் சார்ந்த பகுதிகளில் இருந்து நேரடியாக வரும் பலத்த காற்றின் தாக்கத்தை உணர முடியும். குறிப்பாக, கோடை காலத்தில், பலத்த காற்று வீசுவது வழக்கம்.இதை அடிப்படையாகக்கொண்டே, மின் உற்பத்திக்காக இப்பகுதியில், அதிகளவு காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்நிலையில், 'அம்பான்' புயலின் தாக்கம் காரணமாக இரண்டு நாட்களாக, உடுமலை பகுதியில், அதிக வேகத்துடன் காற்று வீசி வருகிறது.பலத்த காற்றால், பல இடங்களில், தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளன. நெடுஞ்சாலைகளிலும், காற்றின் வேகத்தால் இரு சக்கர வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.உடுமலை அருகே அடிவள்ளி கிராமத்தில், பலத்த காற்றால், மின்பாதையின் மீது தென்னை மரம் விழுந்து, விவசாய இணைப்புகளுக்கான மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. மின்வாரிய பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.அதிக காற்றால், காற்றாலைகளிலும், சீரான உற்பத்திக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழை துவங்கினால், காற்றின் தாக்கம் குறையும் வாய்ப்புள்ளதால், அனைத்து தரப்பினரும், மழையை எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X