'தடையற்ற வர்த்தகத்தை தடுக்கும் சீனாவை தண்டிக்க வேண்டும்'

Added : மே 21, 2020
Share
Advertisement

வாஷிங்டன் : ''தாராள சந்தையை அழிக்கும் சீனாவை, அமெரிக்கா தண்டிக்க வேண்டும்,'' என, அந்நாட்டின் குடியரசு கட்சி நிர்வாகியான, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே கூறியுள்ளார் .

இதுகுறித்து, அவர் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை: உலக அளவில், தாராள சந்தையை அழிக்கும் நடவடிக்கைகளை, சீனா மேற்கொண்டு வருகிறது. இந்த விஷயத்தில், அமெரிக்கா உடனடியாக தலையிட்டு, தாராள சந்தையை பாதுகாப்பதுடன், நம் சந்தையை, சீனா மறைமுகமாக சுரண்டுவதையும், கொள்ளை லாபம் சம்பாதிப்பதையும் தடுக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளுக்காகவே, உலக வர்த்தக அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளை, அந்தநாடு தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் நெருக்கடியில் இருந்து, மக்களை பாதுகாக்கும் அதே நேரத்தில், சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள, ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.

குறிப்பிட்ட மருந்துகள் முதல், முக கவசங்கள், கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வரை, நாம் சீனாவை எந்த அளவிற்கு சார்ந்துள்ளோம் என்பதை, வைரஸ் தொற்று நமக்கு உணர்த்தியுள்ளது. அமெரிக்காவிலிருந்து, பாதுகாப்பு உபகரணங்கள் இறக்குமதியில், 50 சதவீதத்தை, தன் வசம் வைத்திருக்கும் சீனா, தங்கள் நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதை தடுத்து, அவற்றைப் பதுக்கியது.எனவே, அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை சீனா அழிப்பதை தடுக்க, வலுவான அமைப்பை உருவாக்குவதுடன், அந்நாட்டின் முறையற்ற நடவடிக்கைகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X