பொது செய்தி

தமிழ்நாடு

பணியாளர்களுக்கு சத்து மாத்திரைகள்: சுகாதாரத்துறை சார்பில் வழங்கல்

Added : மே 21, 2020
Share
Advertisement
உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்க அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.சமூக நலத்துறையின் கீழ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அங்கன்வாடி மையங்களும், செயல்படவில்லை.இருப்பினும்,

உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்க அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.சமூக நலத்துறையின் கீழ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அங்கன்வாடி மையங்களும், செயல்படவில்லை.இருப்பினும், குழந்தைகளுக்கு உணவு வழங்குவதில் தடை ஏற்படாமல் இருக்க, ஒவ்வொரு குழந்தைக்கும் தேவையான அளவு முட்டை, அரிசி, பருப்பு மற்றும் சத்து மாவு வழங்கப்படுகிறது.அங்கன்வாடி பணியாளர்கள், குழந்தைகளின் வீடுகளுக்கு நேரடியாகச்சென்று, உணவு பொருட்களை வழங்குகின்றனர். கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களையும், கண்காணிக்கும் பணிகளையும் செய்கின்றனர்.களப்பணியில் இருக்கும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றிய அங்கன்வாடி பணியாளர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. அந்தந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகத்துக்கு, பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுகாதாரத்துறையின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X