சாலையில் குழி; இது குடிநீர் வடிகால் வாரியத்தின் ஸ்டைல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாலையில் குழி; இது குடிநீர் வடிகால் வாரியத்தின் 'ஸ்டைல்'

Added : மே 21, 2020
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, பல்வேறு கிராமங்களுக்கான முக்கிய இணைப்பு ரோட்டில், எவ்வித அறிவிப்பும் வைக்காமல் குடிநீர் வடிகால் வாரியம் குழி தோண்டியுள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட டி.நல்லிக்கவுண்டன்பாளையம், களத்துப்புதுார், காளிபாளையம், தேவம்பாடி வலசு, செ.க.,புதுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு முக்கிய
 சாலையில் குழி;  இது குடிநீர் வடிகால் வாரியத்தின் 'ஸ்டைல்'

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, பல்வேறு கிராமங்களுக்கான முக்கிய இணைப்பு ரோட்டில், எவ்வித அறிவிப்பும் வைக்காமல் குடிநீர் வடிகால் வாரியம் குழி தோண்டியுள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட டி.நல்லிக்கவுண்டன்பாளையம், களத்துப்புதுார், காளிபாளையம், தேவம்பாடி வலசு, செ.க.,புதுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு முக்கிய வழித்தடமாக உள்ளது ஜமீன் முத்துார் - ராமபட்டிணம் ரோடு. நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள ரோட்டில், ஜமீன் முத்துாரில் திடீரென குழி தோண்டி, குடிநீர் திட்டத்துக்காக குழாய்கள் பதித்தனர். இதனால், ரோட்டில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.அந்த வழித்தடத்தின் முக்கிய சந்திப்புகளான பாலக்காடு ரோடு, நல்லிக்கவுண்டன்பாளையம் ஆகிய இடங்களில்போக்குரவத்து தடை செய்யப்பட்டுள்ளது குறித்து, எவ்வித அறிவிப்பும்வைக்கவில்லை.இதனால், நுாற்றுக்கணக்கான வாகனங்கள், பணி நடக்கும் இடம் வரை வந்து, செல்ல வழியின்றி பல கி.மீ., துாரம் சுற்றிச் சென்றன.ஆபத்து, அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் வந்தாலும், இது தான் அப்பகுதியில் நிலைமை.அங்கு, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், 420 மீட்டர் தொலைவுக்கு ரோட்டை தோண்டி குழாய் பதிக்கும் பணி நடக்கிறது.ஒரு பொறுப்பான அரசு துறை, எவ்வித அறிவிப்பும் வைக்காமல், ரோட்டில் குழி தோண்டியுள்ளது.இது குறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, 'நெடுஞ்சாலை துறையும் பணி செய்வதால், அவர்கள் அறிவிப்பு வைப்பார்கள் என நினைத்து, நாங்கள் அறிவிப்பு வைக்கவில்லை,' என பொறுப்பின்றி பதிலளித்தனர்.இனிமேலாவது, அறிவிப்பு வைத்து, மக்கள் அலைமோதுவதையும், விபத்துக்குள்ளாவதையும் தவிர்க்க, அதிகாரிகள்நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X