பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவிற்கு 4 நாள் மட்டுமே சிகிச்சை

Added : மே 21, 2020
Share
Advertisement

சிவகங்கை:கொரோனா தொற்று உறுதியுடன் வருவோருக்கு அரசு மருத்துவமனையில் 4 நாட்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா, டில்லி, குஜராத் மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் புலம்பெயர் தொழிலாளிகளே அதிக தொற்றுடன் இருப்பதாக பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இம்மூன்று மாநிலங்களில் இருந்து அந்தந்த மாவட்டங்களுக்கு வருவோருக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் ரத்தம், சளி மாதிரியை பரிசோதித்து, தொற்று உறுதியாகும் பட்சத்தில் அரசு மருத்துவமனை 'கொரோனோ வார்டில்' சேர்க்க வேண்டும்.

அங்கு 4 நாட்கள் சிகிச்சைக்கு பின், சளி, தொண்டை வலி, மூச்சுத்திணறல், காய்ச்சல் போன்ற அறிகுறி இல்லாவிடில் அவர்களை டிஸ்சார்ஜ் செய்து, 14 நாட்கள் வீட்டு தனிமையில் வைக்க வேண்டும். இம்மூன்று மாநிலங்கள் தவிர்த்து பிற மாநிலத்தில் இருந்து வருவோர் விரும்பினால் மட்டுமே பரிசோதனை செய்து கொள்ளலாம்.

ஆனால், அவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமையில் இருப்பது அவசியம் என சுகாதாரத்துறை தெரிவித்துஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X