பொது செய்தி

தமிழ்நாடு

அக்காமலை செக்டேம் விரிவுபடுத்த திட்டம்

Added : மே 21, 2020
Share
Advertisement

வால்பாறை:வால்பாறை அடுத்துள்ள, அக்காமலை செக்டேம் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள நிலையில், நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார்.வால்பாறை நகரில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகரில் இருந்து, 8 கி.மீ., தொலைவில் உள்ள அக்காமலை செக்டேமில் இருந்து, குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனையடுத்து, அக்காமலை செக்டேமை துார்வாரி, விரிவுபடுத்த நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.வால்பாறை வந்த நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் சுல்தானா, அக்காமலை செக்டேம் பகுதியை ஆய்வு செய்தார். மண்டல பொறியாளர் வெங்கடேஷ், நகராட்சி கமிஷனர் பவுன்ராஜ், நகராட்சி பொறியாளர் சரவணபாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X