பொது செய்தி

தமிழ்நாடு

சமூக விலகலை பின்பற்றும் மலைவாழ் மக்கள்: உதவித்தொகை பெற நடைபயணம்

Added : மே 21, 2020
Share
Advertisement
 சமூக விலகலை பின்பற்றும் மலைவாழ் மக்கள்: உதவித்தொகை பெற நடைபயணம்

உடுமலை:ஊரடங்கு காலத்திலும் உதவித்தொகை பெற, பல கி.மீ., துாரம் நடைப்பயணமாக வந்து செல்லும் மலைவாழ் கிராம மக்கள், சமூக இடைவெளியை பின்பற்றி, பிறருக்கு முன்னுதாரணமாக நடந்து கொள்கின்றனர்.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், தளிஞ்சி, குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு, ஆட்டுமலை உட்பட, 13 மலைவாழ் கிராமங்கள் உள்ளன.அரசின் முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ், அங்கு வசிக்கும் மக்கள் பயனாளிகளாக பயன்பெற்று வருகின்றனர். ஆனால், உதவித்தொகை பெறவும், ரேஷன் பொருட்களுக்காகவும், சமவெளிப்பகுதிக்கு வந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.உதாரணமாக, தளிஞ்சி மலைவாழ் கிராம மக்கள், பல கி.மீ., துாரத்துக்கு நடந்து வந்து உதவித்தொகை பெற்றுச்செல்கின்றனர்.ஊரடங்கு இல்லாத போது, சின்னாறு செக்போஸ்ட் வரை நடை பயணமாக வந்து, அங்கிருந்து, பஸ்சில் மானுப்பட்டி, உடுமலை உட்பட பகுதிகளுக்கு அப்பகுதி மக்கள் வந்து சென்று வந்தனர்.ஊரடங்கு காரணமாக, உடுமலை-மூணாறு வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படாததால், 15க்கும் அதிகமான கி.மீ., துாரம், நடைபயணமாக வந்து உதவித்தொகை பெற்றுச்செல்கின்றனர்.உதவித்தொகை உட்பட நலத்திட்டங்களை நேரடியாக தங்களது கிராமத்துக்கே கொண்டு வந்து வினியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. இருப்பினும், சமவெளிப்பகுதிக்கு வரும் போதும், திரும்ப தங்கள் கிராமத்துக்கு திரும்ப செல்லும், வழித்தடத்திலும், சமூக இடைவெளி விட்டே நடந்து செல்கின்றனர்.இதே போல், தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் இடங்களிலும், சமூக இடைவெளியை பின்பற்றி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நடந்து கொள்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X