நிறுவனங்கள் திறந்தும் பலனில்லை: போக்குவரத்து இல்லாததால் தவிப்பு

Added : மே 21, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் இருந்து, தினமும் வெளியூர்களுக்கு சென்று பணியாற்றுபவர்கள், பொது போக்குவரத்து வசதி இல்லாததால், வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.தமிழகத்தில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கோவை, திருப்பூர் பகுதிகளில் பெரும்பாலான கடைகள், தொழில் கூடங்கள், அலுவலகங்கள் கட்டுப்பாடுகளுடன் செயல்பட துவங்கியுள்ளன. பொள்ளாச்சியில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். ஊரடங்கின் போது, அலுவலகங்கள், நிறுவனங்கள் மூடப்பட்டதால், பணியாளர்கள் வீட்டில் இருந்தனர்.தற்போது, நிறுவனங்கள் திறக்கப்பட்டாலும், போக்குவரத்து வசதி இல்லாததால் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.இந்நிலையில், ஜூன், 30ம் தேதி வரை ரயில் போக்குவரத்து துவங்கப்படாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழக அரசும் பஸ்கள் இயக்கம் எப்போது, என்ன கட்டுப்பாடுகளுடன் பஸ்கள் இயங்கும் என்பது குறித்து அறிவிக்கவில்லை.இதனால், இரண்டு மாத ஊரடங்கால் ஊதியம் இழந்துள்ள தனியார் நிறுவன பணியாளர்கள், நிறுவனங்கள் செயல்பாட்டுக்கு வந்த பிறகும், பணிக்கு செல்ல முடியாததால், மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X