பொது செய்தி

தமிழ்நாடு

ரோடுகளில் 'சிக்னல்' மீண்டும் இயக்கம்: 'தினமலர்' செய்தி எதிரொலி

Added : மே 21, 2020
Share
Advertisement
 ரோடுகளில் 'சிக்னல்' மீண்டும் இயக்கம்: 'தினமலர்' செய்தி எதிரொலி

உடுமலை:'கொரோனா' ஊரடங்கு காரணமாக, பிரதான ரோடு சந்திப்புகளில் சிக்னல்கள் இயக்கப்படாததோடு, போக்குவரத்து போலீசார் பாதுகாப்பும் இல்லாமல் இருந்தது. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால், உடுமலை தளி ரோடு, திருப்பூர் ரோடு, தாராபுரம் ரோடு உள்ளிட்ட ரோடு சந்திப்புகளில் வாகன போக்குவரத்து அதிகரித்தது.சிக்னல் செயல்படாமல், போலீஸ் பாதுகாப்பு இல்லாததாலும், தாறுமாறாக வாகனங்கள் இயக்கப்படுவதால், வாகன நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்தன. இது குறித்து 'தினமலர்' நாளிதழில் நேற்றுமுன்தினம் செய்தி வெளியானது. இதனையடுத்து, தளி ரோடு சிக்னல் மீண்டும் இயக்கப்பட்டு, போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X