பொது செய்தி

தமிழ்நாடு

திருமூர்த்தி அணையில் பயன்படுத்தாத வண்டல் மண்: மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை

Added : மே 21, 2020
Share
Advertisement

உடுமலை:திருமூர்த்தி அணை அருகே பயன்படுத்தப்படாமல் உள்ள நிலத்தில், வண்டல் மண் அள்ளி, மழை நீரை சேகரிக்க மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பி.ஏ.பி., பாசன திட்டத்துக்குட்பட்ட திருமூர்த்தி அணை, 60 அடி உயரமும், 1.90 டி.எம்.சி., கொள்ளளவும் கொண்டதாகும். அணையின் நீர் தேங்கும் பகுதியில் வண்டல் மண் தேங்கி, நீர் தேக்கும் கொள்ளளவு பெருமளவு குறைந்துள்ளது.அணை கட்டும் போது, அணையின் வலது கரை ஓரத்தில், கிழக்குப்பகுதியில் உள்ள கோனக்கரடு, பெருமாள் மலை கரடு, விட்டம்பாலி மலைத்தொடர் பகுதியில், விவசாயிகளிடமிருந்து, 300 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம் கையகப்படுத்தப்பட்டது.ஆனால், இந்த நிலம் பயன்படுத்தப்படாமல், வீணாக உள்ளது. இதில், நீர்த்தேக்கும் வகையில், துார்வார வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.இதனையடுத்து, அணையை துார்வாரி, கூடுதல் மழை நீர் சேமிக்கும் வகையில், திருமூர்த்தி அணையை ஒட்டி, பயன்படுத்தப்படாமல் இருந்த நிலத்தில், வண்டல் மண் அள்ள கடந்தாண்டு அரசு அனுமதி வழங்கியது.அதன்படி, திருமூர்த்தி அணையில், கிழக்கு பகுதியில், 5.06 எக்டர் பரப்பளவில், 50 ஆயிரத்து 600 கன மீட்டர் எடுக்க அனுமதிக்கப்பட்டு, விவசாயிகள் பயன்பெற்றனர். இந்நிலையில், 300 ஏக்கர் பரப்பளவில், விடுபட்ட பகுதிகளில், வண்டல் மண் அள்ள அனுமதிக்க வேண்டும் என மீண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து ஜல்லிபட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கும் மனு அனுப்பியுள்ளனர்.மனுவில், 'திருமூர்த்தி அணையை ஒட்டி, பயன்படுத்தப்படாமல் உள்ள நிலத்தில், வண்டல் மண் அள்ளினால், மழைக்காலத்தில், மழை நீரை சேகரிக்க முடியும். இதனால், வறட்சியால் பாதித்துள்ள சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். நீர் நிலைகளில் வண்டல் மண் அள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அடிப்படையில், திருமூர்த்தி அணைப்பகுதியில், வண்டல் மண் அள்ள, தென்மேற்கு பருவமழை துவங்கும் முன் அனுமதிக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X