வால்பாறை:வால்பாறையில், மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வால்பாறை தாலுகா அலுவலகத்துக்கு 'கெரசின்' கேனுடன் வந்த தொழிலாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தாசில்தார் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் ஆகியோர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.பெண் கூறுகையில், 'மாற்றுத்திறனாளி மகளை, மாது (எ) மாதவன், 65, என்பவர் கடந்த, 9ம் தேதி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இது குறித்து, முடீஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், மகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, 'கெரசின்' கேனுடன் வந்தோம்,' என்றனர்.அதன் பின் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட பெண், வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார். பரிசோதனை முடிவு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE