பொது செய்தி

தமிழ்நாடு

நெசவாளர் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம்

Added : மே 21, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:வேலையிழந்து வாடும் கைத்தறி நெசவாளர்களுக்கு, நிவாரணமாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என, அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி, நெகமம் பகுதியில் அதிகளவில், நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நெகமம், காட்டம்பட்டி பகுதியில் செயல்படும் நெசவாளர் கூட்றவு சங்கங்களில், சிலர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். 85 சதவீத நெசவாளர்கள், தனியாருக்கு சேலைகள் நெசவு செய்து கொடுக்கின்றனர். இவர்கள் நலவாரியத்தில் பெயர் பதிவு செய்யாமல், எவ்வித சலுகையும் கிடைக்காமல் ஏழ்மையில் உள்ளனர்.தற்போது, கொரோனா வைரஸ் பரவலால் வேலையிழந்து, வறுமையில் வாடும் நெசவாளர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, காட்டம்பட்டி, நெகமம் கூட்டுறவு கைத்தறி சங்கங்களும், கைத்தறி வாரிய முன்னாள் தலைவர் மனோகரன் கேரிக்கை விடுத்தனர்.பரிசீலனை செய்த முதல்வர், நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள, உறுப்பினராக இல்லாத அனைத்து நெசவாளர் குடும்பங்களுக்கும் தலா, இரண்டாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். முதல்வரின் அறிவிப்புக்கு, நெசவாளர்களும், கூட்டுறவு சங்க நிர்வாகிகளும் நன்றி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X