பொது செய்தி

தமிழ்நாடு

நெல் கொள்முதல் நிலையம் துவங்கி விலை உயர்த்தி வழங்க கோரிக்கை

Added : மே 21, 2020
Share
Advertisement

ஆனைமலை:ஆனைமலை ஒன்றியத்தில், ஒரு வாரத்தில் நெல் அறுவடை துவங்க உள்ளதால், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கி, விலையை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு வழங்கப்படும் நீரை பயன்படுத்தி, ஆனைமலை ஒன்றியத்தில், இரண்டு போகத்தில் நெல் சாகுபடி நடக்கிறது.இரண்டாம் போக சாகுபடிக்கு கடந்த ஜன.,1ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு ஏப்., 15ம் தேதி தண்ணீர் நிறுத்தப்பட்டது.ஜன., மாதம் விவசாயிகள், 120 நாட்கள் கொண்ட, 'கோ - 51, ஏ.எஸ்.டி., ஏ.எல்.ஆர்.டி.,' உள்ளிட்ட நெல் ரகங்களை சாகுபடி செய்தனர். இந்நிலையில், நடவு செய்த நெல் ரகங்கள் இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை செய்யப்பட உள்ளது.இதையடுத்து, நெல்லுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி, உடனடியாக கொள்முதல் நிலையம் அமைக்க, விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது:கடந்த முறை முதல் போக சாகுபடிக்கு, நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம், அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைத்தது. சன்னரக நெல் குவிண்டாலுக்கு, 1,905 ரூபாய், பொதுரக நெல் குவிண்டாலுக்கு, 1,865 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டது. அரசு நிர்ணயித்த விலையில் நெல் விற்பனை செய்தால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இன்னும் ஒரு வாரத்தில், அறுவடை துவங்க உள்ளது. விவசாயிகள் நலன் கருதி, விரைவில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு, 2,300 ரூபாய், பொது ரக நெல்லுக்கு, 2,250 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.அதேபோல், ஈரப்பதத்தை, 17 சதவீதத்திலிருந்து, 20 சதவீதமாக மாற்ற வேண்டும். அப்போது, தான் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாது. விவசாயிகள் கோரிக்கையை அதிகாரிகள் அரசுக்கு தெரிவித்து, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X