பொது செய்தி

தமிழ்நாடு

வாளையார் எல்லையில் கண்காணிப்பு கோபுரம்

Added : மே 21, 2020
Share
Advertisement
 வாளையார் எல்லையில் கண்காணிப்பு கோபுரம்

மதுக்கரை:கேரளாவிலிருந்து வரும் கனரக வாகனங்களை சோதனையிட வாளையார் எல்லையில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டது.'கொரோனா' வைரஸ் பரவலை தவிர்க்க, மாநிலம் விட்டு மாநிலம் வரும் வாகனங்களை எல்லைப் பகுதிகளில், தீவிர சோதனை செய்யப்படுகிறது.இருப்பினும், பலர் கனரக வாகனங்களில் மறைந்து பயணிக்கின்றனர். மருத்துவ பரிசோதனைக்கு தப்புவதால், இவர்களால் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது.கேரள மாநிலத்திலிருந்து, வாளையார் எல்லை வழியாக கோவை மாவட்டத்துக்குள் நுழையும் வாகனங்கள், பரிசோதிக்கப்படுகின்றன. தற்போது கனரக வாகனங்களில் மறைந்து பயணிப்போரை கண்டறிய, கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.போலீசார் கூறுகையில், 'கேரளாவிலிருந்து வரும் டேங்கர், டாரஸ் லாரி போன்ற கனரக வாகனங்களில் பலர் பயணிக்கின்றனர். இவர்களை கண்டறிய, கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. சோதனையிலிருந்து யாரும் தப்ப முடியாது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இலகுரக மற்றும் இரு சக்கர வாகனங்களில் வருவோர் சர்வீஸ் ரோட்டில் சோதனை செய்யப்பட்டு, பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X