பொது செய்தி

தமிழ்நாடு

இனி, பாக்கெட்டில் மட்டுமே சமையல் எண்ணெய்?

Added : மே 21, 2020
Share
Advertisement

திருப்பூர்:சமையல் எண்ணெய் வகைகளில், கலப்படத்தைத் தடுக்கும் வகையில், ஜூன் 1 முதல், பாக்கெட்டில் மட்டுமே எண்ணெய் விற்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.எண்ணெய் உற்பத்தியாளர்கள் சிலர் கூறுகையில், 'கிராமங்களிலும், நகரங்களிலும், பலர் எண்ணெய் உற்பத்தியை சிறு முதலீட்டில் மேற்கொண்டு வருகின்றனர். அரசின் உத்தரவால், தனியாக பேக்கிங் லைசென்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதோடு, நவீனக் கருவிகள் வாங்க வேண்டியிருக்கும். ஊரடங்கு அமலால், சிறு உற்பத்தியாளர்கள் மற்றும்வணிகர்கள், ஜூன் 1ல் இதை நடைமுறைப்படுத்த இயலாது. கால அவகாசம் வழங்க வேண்டும்' என்று கூறினர்.உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இது ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டம்தான். இதை அமல்படுத்தவே, தற்போது, அரசு உத்தரவிட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X