பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாரின் பட்டியலை நிராகரிக்கும் வருவாய் துறை!

Added : மே 21, 2020
Share
Advertisement

அவிநாசி:சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் வட மாநில தொழிலாளர்களின் பட்டியல் தயாரிப்பதில், வருவாய் துறையினருக்கும், போலீசாருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது.ஊரடங்கு உத்தரவால், மாநிலத்தின் பல இடங்களில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அரசு உத்தரவுபடி, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், வட மாநில தொழிலாளர்கள், ரயில் அல்லது அவர்களின் செலவில் வாகனங்கள் அமர்த்தி சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
திருப்பூர் உட்பட சில மாவட்டங்களில், போலீசாருக்கும், வருவாய் துறையினருக்கும் இடையே கருத்தொற்றுமை இல்லாததால் குழப்பம் ஏற்படுகிறது. வட மாநில தொழிலாளர்கள் பலர், தினசரி போலீஸ் ஸ்டேஷன் வந்து, தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க போலீசாரிடம் வலியுறுத்துகின்றனர்.இவர்களது பட்டியல் போலீசாரால், தாலுகா வாரியாக வருவாய் துறையினருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதேநேரம் வருவாய் துறையினர், ஒவ்வொரு நிறுவனமாக சென்று, தொழிலாளர்களின் பட்டியலை, கேட்டு பெறுகின்றனர். அந்த பட்டியல் தான், இறுதி செய்யப்படுகிறது.
போலீசார் வழங்கும் பட்டியல், நிராகரிக்கப்படுகிறது. இது, போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வருவாய் துறையினரிடம் கேட்ட போது, 'அனைத்து பட்டியலையும், மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்து விடுகிறோம். அவர்கள்தான் இறுதி செய்கின்றனர்' என்றனர். இவ்விவகாரத்தில், கலெக்டர் தலையிட்டு, ஒருமித்த கருத்தை ஏற்படுத்தினால் மட்டுமே இப்பிரச்னை முடிவுக்கு வரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X