ஊரடங்கால் சாம்பார் பூசணி டன் கணக்கில் தேக்கம்

Added : மே 21, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல் பகுதியில் சாம்பார் பூசணி விளைச்சல் உள்ளபோதும், வாங்க ஆள் இல்லாததால் டன் கணக்கில் தேங்கி, வெயில் மழையில் அழுகி வீணாகிறது.

திண்டுக்கல் தாடிக்கொம்பு, குளத்துார், ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், பழநி, சத்திரப்பட்டி பகுதிகளில் சாம்பார் பூசணி பலஏக்கர் கணக்கில் சாகுபடி செய்கின்றனர். அவை ஒட்டன்சத்திரம் மார்க்கெட் மூலம் கேரளாவுக்கும், சென்னை வழியாக பிறமாநிலங்களுக்கும் அனுப்பப் படுகிறது.

தற்போது கொரோனா ஊரடங்கால் விழாக்கள் எதுவும் நடத்தப்படவில்லை. இதனால் சாம்பார் பூசணியை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. விவசாயிகள் தோட்டத்தில் இருந்து பறித்து டன் கணக்கில் குவித்து வைத்துள்ளனர். அவை தேங்கியுள்ளதால், ரூ. பலஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயி ரவிச்சந்திரன் கூறுகையில், ''4 ஏக்கரில் சாம்பார் பூசணி சாகுபடி செய்தேன். கடந்த ஒருமாதத்தில் 15 டன் பூசணி அறுவடை செய்துள்ளேன். ஊரடங்கால் வியாபாரிகள் வரவில்லை. ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்துள்ளதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தேங்கிய பூசணிக்காய்கள் அழுகி வீணாகின்றன, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X