6 கோடி பேர் வறுமைக்கு ஆளாவர்: உலக வங்கி

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, poverty, World Bank, corona crisis

வாஷிங்டன் : 'கொரோனா தாக்கத்தால், உலகளவில், ஆறு கோடி பேர் கடுமையான வறுமை நிலைக்கு தள்ளப்படுவர்' என, உலக வங்கி எச்சரித்துஉள்ளது.இது குறித்து, உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ் கூறியதாவது:

கொரோனா பரவல் காரணமாக, உலகளவில், ஆறு கோடிக்கும் அதிகமானோர், கடுமையான வறுமை நிலைக்கு ஆளாவர். இது, வறுமையை ஒழிப்பதில், போராடி கிடைத்த முன்னேற்றத்தை வீணாக்கிவிட்டது.


latest tamil newsஇதையடுத்து, கொரோனா தடுப்பு, சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக, உலக வங்கி, நிதியுதவி வழங்கி வருகிறது. இந்த வகையில், 100 வளரும் நாடுகளுக்கு, அடுத்த, 15 மாதங்களில், 12 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். இந்நாடுகளில், உலக மக்கள் தொகையில், 70 சதவீதம் பேர் வசிக்கின்றனர். மொத்த நிதி உதவியில், மூன்றில் ஒரு பங்கு, உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள, ஆப்கன், சாத், ஹைதி, நைஜர் உள்ளிட்ட நாடுகளுக்கு தரப்படும். வளரும் நாடுகள், மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பது தான், உலக வங்கியின் முக்கிய நோக்கம்.

அத்துடன், ஏழைகளுக்கு ரொக்க உதவி, போதிய சுகாதார சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவது, தனியார் துறையை பாதிப்பில் இருந்து காப்பது, பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பது உள்ளிட்டவற்றுக்கும், உலக வங்கி முக்கியத்துவம் அளிக்கிறது. உலக வங்கி திட்டத்தின் கீழ், வளரும் நாடுகளுக்கு உயிர் காக்கும் மருந்துகள், சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள், மருத்துவக் கருவிகள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.இவ்வாறு, அவர்கூறினார்.Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
21-மே-202007:43:08 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Everybody wants free food, freebeeies, etc. Nobody wants to work and earn. Our dmk, admk are maintained the people such a way for their vote bank. But the their party cadres are crorepathi nobody think about this. But blaming modi .. First stop selling their votes for few thousands then see ...
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
21-மே-202005:18:28 IST Report Abuse
Mani . V ஹல்லோ, இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களையும் சேர்த்தால் மொத்தம் 136 கோடிப் பேர்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
21-மே-202005:00:06 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம் வருஷத்துக்கு ரெண்டு கோடி வேலை. பிரதமர் வாய்லே வட சுட்டே மூணே வருஷத்திலே இவங்களை கோடீஸ்வரர் ஆக்கிடுவாரு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X