சென்னை : 'ஈழுவா, தியா' சமுதாய மக்களுக்கு, பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக, கருத்துக்கள், கோரிக்கை மனுக்களை, அரசு வரவேற்றுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், ஈழுவா மற்றும் தியா சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, ஜாதிச்சான்று வழங்கப்படாமல் உள்ளது. தங்களுக்கு, பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்க வேண்டும் என, இந்த மக்கள் கோரி வருகின்றனர். இவர்களின் கோரிக்கைக்கு, அரசு செவி சாய்த்துள்ளது.இந்த மக்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, ஏப்., 21ல் குழு அமைக்கப்பட்டது. வருவாய் துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்யமிஸ்ரா தலைமையில், நான்கு உறுப்பினர்கள், குழுவில் இடம் பெற்றனர்.
இக்குழுவிடம், கோரிக்கை மனுக்கள், ஆவணங்கள் சமர்பிக்க விரும்புவோர், வரும், 26ம் தேதிக்குள், அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் சமர்பிக்கலாம்.'குழு உறுப்பினர் செயலர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல இயக்குனர், எழிலகம் விரிவாக்க கட்டடம், இரண்டாம் தளம், சேப்பாக்கம், சென்னை- - 5' என்ற முகவரிக்கு, எழுத்துப்பூர்வமாக தபாலில் அனுப்பலாம்.மேலும், dir-combc@tn.gov.in என்ற, இ- - மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE