சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தல் வழக்கில் முன்ஜாமின் நிவாரண நிதிக்கு நிபந்தனை தொகை

Added : மே 21, 2020
Share
Advertisement

சென்னை : மணல் கடத்தல் வழக்கில், முன்ஜாமின் கோரியவர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை தொகையை, முதல்வர் நிவாரண நிதிக்கு செலுத்தும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கு எதிராக, சட்ட விரோதமாக மணல் எடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இவ்வழக்கில், முன்ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில், முருகேசன் மனு தாக்கல் செய்தார்.இம்மனு, நீதிபதி வேலுமணி முன், விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஜோதிகுமார், முன்ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும், 'முன்ஜாமின் வழங்கினால், ஒரு யூனிட் மணலுக்கு விதிக்கப்படும் நிபந்தனை தொகையை, முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க உத்தரவிட வேண்டும்' என்றார். இதையடுத்து, ஒரு யூனிட்டுக்கு, 15 ஆயிரம்ரூபாய் என, இரண்டு யூனிட்டுக்கான தொகையாக, 30 ஆயிரம் ரூபாயை, முதல்வர் நிவாரண நிதிக்கு செலுத்த, மனுதாரருக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.இதேபோன்று, முன்ஜாமின் கோரிய, ஐந்து வழக்குகளிலும், முதல்வர் நிவாரண நிதிக்கு செலுத்த, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X