விரைவாக விசாரிக்க அரசாணையை பின்பற்றுவதில் குழப்பம்| Dinamalar

விரைவாக விசாரிக்க அரசாணையை பின்பற்றுவதில் குழப்பம்

Added : மே 21, 2020
Share
புதுடில்லி : 'ஓய்வு பெறுவோர் மீதான ஊழல் புகார்கள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; அப்படி செயல்படாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, சி.வி.சி., எனப்படும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் எச்சரித்துள்ளது. அனைத்து மத்திய அரசு துறைகள், பொதுத் துறை வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், சமீபத்தில்

புதுடில்லி : 'ஓய்வு பெறுவோர் மீதான ஊழல் புகார்கள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; அப்படி செயல்படாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, சி.வி.சி., எனப்படும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் எச்சரித்துள்ளது.

அனைத்து மத்திய அரசு துறைகள், பொதுத் துறை வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், சமீபத்தில் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:அரசு மற்றும் வங்கித் துறை அதிகாரிகள் மீதான, ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை, ஆணையத்துக்கு விரைவாக அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். பல நேரங்களில், ஓய்வு பெறுவோர் மீதான புகார்கள் குறித்த விசாரணையில் அதிக தாமதம் ஏற்படுகிறது. அதனால், சரியான நேரத்தில், சரியான நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட அதிகாரி, ஓய்வு பெறும் மாதத்தின் முதல் வாரத்துக்குள், அவர் மீதான புகார் குறித்த அறிக்கை, ஆணையத்துக்கு வந்து சேர வேண்டும்.அவ்வாறு வராவிட்டால், அந்த அறிக்கையின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாது. மேலும், தாமதமாக செயல்பட்ட, அந்தத் துறை அல்லது நிறுவனத்தின் கண்காணிப்பு அதிகாரி மீது நடவடிக்கை பாயும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X