புகார் பெட்டி 21.05

Added : மே 21, 2020
Share
Advertisement
வீணாகும் குடிநீர்தேனி கே.ஆர்.ஆர்., நகர் ஐ.எம்.ஏ., ஹால் நான்கு ரோடு சந்திப்பின் தாழ்வான பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யும்போது பகிர்மான குழாய்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் வீணாக செல்கிறது. இதை தடுக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆர்.பாலமுருகன், தேனி.* கூடலூரில் இருந்து லோயர்கேம்ப் செல்லும் ரோட்டில் பல இடங்களில் மெயின் குழாய் உடைந்து குடிநீர் வீணாக
 புகார் பெட்டி 21.05

வீணாகும் குடிநீர்

தேனி கே.ஆர்.ஆர்., நகர் ஐ.எம்.ஏ., ஹால் நான்கு ரோடு சந்திப்பின் தாழ்வான பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யும்போது பகிர்மான குழாய்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் வீணாக செல்கிறது. இதை தடுக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆர்.பாலமுருகன், தேனி.

* கூடலூரில் இருந்து லோயர்கேம்ப் செல்லும் ரோட்டில் பல இடங்களில் மெயின் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. கோடைகாலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலையில் இதனை உடனடியாக சீரமைக்க வாரியம் முன்வரவேண்டும்.-

- கா.லட்சுமணன், கூடலூர்.

வேகத்தடையால் விபத்து

தேனி பழைய போஸ்ட் ஆபீஸ் ஓடைத்தெருவில் அதிகமான வேகத்தடைகளால் டூவீலர்கள், இதர வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். பல நேரங்களில் விபத்தில் சிக்குகின்றனர். வேகத்தடைகளை அகற்றி, ரோடை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-

- -என்.லதா, தேனி.---

சிறுபாலத்தில் பள்ளம்

ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி ரோடு சந்திப்பில் சிறுபாலத்தில் பள்ளம் ஏற்பட்டு வருகிறது. பெரிதாகி பாதிப்பு ஏற்படும் முன் சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி.பரமசிவம், ஆண்டிபட்டி

குடிநீர் தட்டுப்பாடு

அனுப்பபட்டி ஊராட்சி மேக்கிழார்பட்டி காளியம்மன் கோயில் பகுதி குடியிருப்புகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் நீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.ராமன், மேக்கிழார்பட்டி

பொதுக்கழிப்பறை தேவை

டி.சுப்புலாபுரத்தில் பெண்களுக்கான பொதுக்கழிப்பறை இல்லாததால் அவதிப்படுகின்றனர். திறந்தவெளி கழிப்பிடத்தால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கழிப்பறை அமைக்க ஊராட்சி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும்

-ஆர்.சீதாலட்சுமி, டி.சுப்புலாபுரம்

போக்குவரத்து சிரமம்

கூடலூர் எருமை கார சாவடி தெருவில் கழிவு நீரோடையில் சேதமடைந்த தடுப்புச்சுவரை கட்டும் பணி ஒரு மாதத்திற்கு முன் முடிந்தது. ஆனால் அப்பகுதியில் போடப்பட்டிருந்த மண் மற்றும் கழிவு பொருட்கள் அகற்றாமல் அப்படியே உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. நகராட்சி நிர்வாகம் உடனடியாக அதனை அகற்ற முன்வரவேண்டும்.

- ஆர். ராயர், கூடலூர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X