பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு ரயிலில் பீகார் சென்ற தொழிலாளர்கள்

Added : மே 21, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட தனியார் பேப்பர் மில், நுாற்பாலைகள், ஓட்டல்களில் வெளிமாநிலத்தவர்கள் தங்கி பணிபுரிகின்றனர்.

ஊரடங்கு உத்தரவால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல மத்திய அரசு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்துள்ளது. திண்டுக்கல்லில் பணியாற்றிய பீகாரைச் சேர்ந்தவர்கள் கணக்கெடுக்கப்பட்டனர். அதில் பழநி -718, ஒட்டன்சத்திரம் -42, வேடசந்துார்- 149, ஆத்துார் -17, நிலக்கோட்டை -120, திண்டுக்கல் தெற்கு -28, மேற்கு- 134, கொடைக்கானல் -134, குஜிலியம்பாறை- 45 என மொத்தம் 1,269 பேர் மற்றும் தேனியில் 331பேர் என 1,600பேர் கண்டறியப்பட்டனர்.

அவர்கள் நேற்று அரசு பஸ், தனியார் கல்லுாரி, பள்ளி வாகனங்கள் மூலம் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் வந்தனர். முன்னதாக அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. கலெக்டர் விஜயலட்சுமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். எஸ்.பி., சக்திவேல், நேர்முக உதவியாளர் (பொது) ராஜ்குமார் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X