சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடந்து சென்ற நாமக்கல் தொழிலாளர்கள் மீட்பு

Added : மே 21, 2020
Share
Advertisement
தேவாரம்:கேரளாவில் இருந்து நடந்து சென்ற நாமக்கல் தொழிலாளர்கள் தேனி மாவட்டம் தேவாரத்தில் மீட்கப்பட்டு வாகனங்களில் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்த 17 கட்டட தொழிலாளர்கள் கேரள மாநிலம் கோட்டயத்தில் வேலை பார்த்தனர். வேலையில்லாததால் சொந்த ஊருக்கு செல்வதற்காக அங்கிருந்து சரக்கு வாகனத்தில் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் வந்தனர். இரு

தேவாரம்:கேரளாவில் இருந்து நடந்து சென்ற நாமக்கல் தொழிலாளர்கள் தேனி மாவட்டம் தேவாரத்தில் மீட்கப்பட்டு வாகனங்களில் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்த 17 கட்டட தொழிலாளர்கள் கேரள மாநிலம் கோட்டயத்தில் வேலை பார்த்தனர். வேலையில்லாததால் சொந்த ஊருக்கு செல்வதற்காக அங்கிருந்து சரக்கு வாகனத்தில் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் வந்தனர். இரு குழுக்களாக பிரிந்து தேனி மாவட்டம் தேவாரம் சாக்குலுாத்து வனப்பாதை வழியாக இறங்கினர்.

போடி ரோட்டில் நடந்து சென்றவர்களை தேவாரம் போலீசார் மடக்கி தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.போலீசார் கூறுகையில், 'கேரள எல்லையில் நடைபெறும் சோதனைக்கு பயந்து இரவில் இரு கைக்குழந்தைகள், 10 பெண்கள் உள்ளிட்ட 19 பேர் வனப்பாதை வழியாக நடந்து வந்துள்ளனர். போக்குவரத்து இல்லாததால் நடந்தே கொல்லிமலை செல்வதற்காக முயற்சித்தனர்.

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவில் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை என்று உறுதி படுத்தப்பட்டதால் தனியார் வாகனங்களில் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர், 'என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X