பொது செய்தி

தமிழ்நாடு

எப்போது சரியாகும் பழநி குடிநீர் வினியோகம்

Added : மே 21, 2020
Share
Advertisement

பழநி:பழநி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் பல பகுதிகளில் பத்து நாட்களாக குடிநீர் வரவில்லை என தினமலர் சூப்பர் ரிப்போர்டரிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து விசாரித்ததில் கிடைத்ததாவது:பழநியின் குடிநீர் தேவையை, பாலாறு - பொருந்தலாறு அணை, கோடைகால நீர்த்தேக்கம் பூர்த்தி செய்கிறது. குடிநீர் வினியோகத்தை சீர்படுத்தி அனைவருக்கும் குடிநீர் கிடைக்க ரூ.15 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது.கோடைகால நீர்த்தேக்கத்தை விரிவுபடுத்தி, புதிய குழாய்கள் பதித்து ஏற்பாடு செய்யப்படுகிறது.

நகரில் பிரதான குழாய் பதிக்கும் பணி நடந்ததால் 10 நாட்களாக மேலாக பல இடங்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. பதிக்கப்பட்டுள்ள புதிய குழாயில் குடிநீர் வினியோகித்தபோது பல இடங்களில் நீர்கசிவு ஏற்பட்டுள்ளது.

பழநி முன்னாள் கவுன்சிலர் பச்சைமுத்து கூறுகையில், எங்கள் பகுதியில் பத்து நாட்களாக குடிநீர் வரவில்லை. தற்போது நகராட்சி மூலம் எங்களுக்கு லாரிகளில் தண்ணீர் வினியோகம் செய்யவேண்டும். பழநி நகராட்சி இதில் அக்கறை செலுத்தவேண்டும்'' என்றார்.

பழநி நகராட்சி பொறியாளர் சண்முகம் கூறுகையில், குடிநீர் திட்டப்பணிகளை விரைவாக நிறைவேற்றி வருகிறோம். இப்பணிகளின் போது பிரதான குழாய்கள் மாற்றப்பட்டன. தற்போது அந்த குழாய் வழியே குடிநீர் வினியோகிக்கப் படுகிறது. இன்றுடன் அனைத்து பகுதிக்கும் குடிநீரை வினியோகம் செய்து விடுவோம். பின் புதிதாக பதித்த குழாய்களில் நீர்கசிவை சரிசெய்வோம்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X