திண்டுக்கல்:சீலப்பாடி உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு ரூ.5.89 லட்சம் மானியத்தில் சுழல் கலப்பை, விசை களை எடுக்கும் கருவி, அறுவடை கருவியை, வேளாண் இணை இயக்குநர் பாண்டித்துரை வழங்கினார்.
துணை இயக்குனர் சுருளியப்பன், கதிரேசன், உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் விஜயராணி, நேர்முக உதவியாளர் ரவிபாரதி உடன் இருந்தனர். ஏற்பாடுகளை உதவி இயக்குனர் நாகேந்திரன், அலுவலர்கள் ராமசாமி, கவிதா செய்தனர்.
மேலும் சாணார்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி, எமக்கலாபுரம், மார்க்கம்பட்டி, மடூர் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கும் ரூ.34.35 லட்சத்தில் பண்ணை இயந்திரங்கள் வழங்கப்பட்டது. உதவி இயக்குனர் மதன்குமார், அலுவலர் ஆனந்தன் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE