பொது செய்தி

தமிழ்நாடு

எரியோட்டில் 15 மீட்டர் அகலமாகும் ரோடு

Added : மே 21, 2020
Share
Advertisement

எரியோடு:திண்டுக்கல்லில் இருந்து எரியோடு, குஜிலியம்பாறை வழியே கரூருக்கு மாநில நெடுஞ்சாலை உள்ளது.

இதில் தொட்டணம்பட்டி துவங்கி டி.கூடலுார் வரை பழநி நெடுஞ்சாலை கோட்டத்தின் கீழ் உள்ளது.இந்த ரோட்டை அகலமாக்கும் பணி துவங்கியுள்ளது. முதற்கட்டமாக தொட்டணம்பட்டி -- எரியோடு வரை 15 மீ., அகல ரோடாக மாற்ற முடிவாகியுள்ளது. ரோடு பணிக்கு இடையூறாக இருக்கும் மின்கம்பங்களை வேறு இடங்களுக்கு மாற்ற நேற்று நெடுஞ்சாலைத் துறையினர் கணக்கீடு பணி செய்தனர்.

அதிகாரிகள் கூறுகையில், 'தொட்டணம்பட்டி - எரியோடு வரை முதற்கட்டமாக பணி முடிக்க உள்ளோம். புதிய ரோடு 7 மீ., கொண்ட இருவழி பாதையாகவும், நடுவே ஒரு மீட்டர் அகலத்தில் மைய திட்டும் இருக்கும்.தார் ரோட்டிற்கு வெளியே இருபுறமும் தலா 2 மீ., மண் தரை என மொத்தம் 19 மீ., இடம் ரோடு பணிக்கு தேவைப்படும். பற்றாக்குறை இருக்கும் இடங்களில் கையகப்படுத்துதல் சட்டப்படி ஆர்ஜிதம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X