தெருவுக்கு சீல் வைத்ததால் சிரமத்தில் மக்கள்

Added : மே 21, 2020
Share
Advertisement
போடி:போடியில் நகராட்சி 14 வார்டில் கீரை மார்க்கெட் தெருவை சுற்றி போஸ்பஜார், அய்யணன் தெரு, வெங்கடாசலம் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் உள்ளன. 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கீரை மார்க்கெட் தெருவை தினசரி காய்கறி மார்க்கெட் ஆக 30 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பயன்படுத்தி வந்தனர். சமூக இடைவெளியில்லாத கடைகளால் கொரோனா ஏற்படும் என்பதால் அவற்றை அமைக்கக்
 தெருவுக்கு சீல் வைத்ததால் சிரமத்தில் மக்கள்

போடி:போடியில் நகராட்சி 14 வார்டில் கீரை மார்க்கெட் தெருவை சுற்றி போஸ்பஜார், அய்யணன் தெரு, வெங்கடாசலம் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் உள்ளன.

600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கீரை மார்க்கெட் தெருவை தினசரி காய்கறி மார்க்கெட் ஆக 30 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பயன்படுத்தி வந்தனர். சமூக இடைவெளியில்லாத கடைகளால் கொரோனா ஏற்படும் என்பதால் அவற்றை அமைக்கக் கூடாது என நகராட்சி அதிகாரிகள், போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் அதையும் மீறி கடைகள் அமைக்கப்பட்டது. அதை தடுக்க முடியாத நகராட்சி அதிகாரிகள், கீரைக்கடை தெரு செல்லும் பகுதிக்கு கம்புகட்டி சீல் வைத்தனர். இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர்.அத்தியாவசியப்பொருட்கள் வாங்க, மருத்துவமனை, குடியிருப்புபகுதிகளுக்கு சென்று வர சீல் அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X