3 இடங்களில் அடுத்தடுத்து தாக்குதல் ஆப்கானிஸ்தானில் 23 பேர் பலி

Added : மே 21, 2020
Share
Advertisement

காபூல் : ஆப்கனின் மூன்று மாகாணங்களில், பயங்கரவாதிகளால் அடுத்தடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 23 பேர் கொல்லப்பட்டனர்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் பர்வான் மாகாணத்தில் உள்ள மசூதியில், ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, சிறப்பு தொழுகை நடைபெற்றது. அப்போது, அம்மசூதிக்குள் நுழைந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் சிலர், அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது, துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில், 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.அடுத்த சில மணிநேரத்தில், கோஸ்ட் மாகாணத்தில், மசூதியில் இருந்து திரும்பிய ஒரு குடும்பத்தினர் மீது, மர்ம நபர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டார். இதில், மூன்று சகோதரர்கள் உயிரிழந்தனர்.

இவ்விரு தாக்குதல்களையும் நடத்தியோரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதையடுத்து, பர்வான் மாகாணத்தில் உயிரிழந்தோரின் சடலங்களை எடுத்துச் சென்ற அவர்களின் குடும்பத்தினர், அவற்றை கவர்னர் அலுவலகம் முன் வைத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.'இந்த தாக்குதலை அரங்கேற்றியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்' என, அவர்கள் வலியுறுத்தினர்.இந்நிலையில் 'இந்த சம்பவத்திற்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை' என, தலிபான் பயங்கரவாத அமைப்பு மறுத்துள்ளது.

இதற்கிடையே, தாக்கர் மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளை குறிவைத்து, தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், அரசுக்கு ஆதரவான ஆயுதம் ஏந்திய குழுவினர், ஒன்பது பேர் உயிரிழந்தனர்; ஆறு பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு பாதுகாப்புப் படையினர் விரைந்து செல்வதற்குள், பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X