கணவர் மர்ம சாவு மனைவியிடம் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவர் மர்ம சாவு மனைவியிடம் விசாரணை

Added : மே 21, 2020
Share

நாகர்கோவில் : கணவரின் மர்ம மரணம் குறித்து, மனைவியிடம் விசாரணை நடக்கிறது.குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே, நித்திரவிளை புனித தோமஸ் நகரைச் சேர்ந்தவர் ஜாப்லின், 30. இவர், சென்னையில் படிக்கும் போது, ஆர்.கே. நகரைச் சேர்ந்த கார்க்கி, 35, என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

இருவரும், துாத்துாரில், சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகின்றனர். கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று காலை, கார்க்கி வீட்டில் துாக்கில் சடலமாக தொங்கினார்.நித்திரவிளை போலீசார், ஜாப்லினிடம் விசாரணை நடத்திய போது, கணவனுடன் தகராறு இருந்ததை ஒப்புக் கொண்டார். ஜாப்லின் உறவினர்களிடமும் விசாரணை நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X