பொது செய்தி

இந்தியா

செய்தி சில வரிகளில்

Added : மே 21, 2020
Share
Advertisement

மீண்டும் போக்குவரத்து நெரிசல்புதுடில்லி: நாடு முழுதும், நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளதால், வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன. சில பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், தலைநகர் டில்லி, மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் உத்தர பிரதேசத்தின் நொய்டா பகுதிகளில், நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவை ஊர்ந்து செல்லும், 'வீடியோ'க்கள், சமூக வலைத் தளங்களில் பரவி வருகின்றன.உதவி கண்காணிப்பாளருக்கு தொற்றுபுதுடில்லி: டில்லியில் உள்ள ரோஹிணி சிறையின் உதவி கண்காணிப்பாளருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவரும், அவரின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த, 16ம் தேதி, ரோஹிணி சிறையில் இருந்த, 15 கைதிகளுக்கும், தலைமை வார்டனுக்கும் வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் துவங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர்ஷில்லாங்: மேகாலயா சட்டசபையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச்சில் ஒத்தி வைக்கப்பட்ட பட்ஜெட் கூட்டத் தொடர், நேற்று மீண்டும் துவங்கியுள்ளது. நாளை வரை நடைபெறும் இந்த கூட்டத் தொடரில் பங்கேற்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கு, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முதல்வர் உட்பட அனைவருக்கும், முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உடல் வெப்பநிலையை சரிபார்த்து விட்டு, கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்த பின்னரே, சட்டசபைக்குள் நுழைய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லாரிகளுக்கு தீ வைத்த நக்சல்கள்கட்சிரோலி: மஹாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில், 1ம் தேதி, பெண் நக்சல் ஸ்ருஜனக்கா, போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதை கண்டிக்கும் வகையில், நேற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு, நக்சல்கள் அழைப்பு விடுத்தனர். தனோரா பகுதியில் உள்ள சாலைகளை, முடக்கி, நான்கு லாரிகளை தீயிட்டு கொளுத்தினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பசியால் உயிரிழந்த தொழிலாளர்அவுரங்காபாத்: மஹாராஷ்டிராவின் புனேவில் இருந்து, சொந்த ஊருக்கு நடந்து சென்ற தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். பீட் மாவட்டத்தின், தனோரா கிராமத்தில் அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில், அதிகபடியான நடை பயணம் மற்றும் பசி காரணங்களால், அவர் உயிரிழந்துள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் குடும்பத்தின் அனுமதியுடன், அவரின் இறுதிச் சடங்குகளை, தனோரா கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் செய்தனர்.அரசு பேருந்துகள் இயக்கம்திருவனந்தபுரம்: கேரளாவில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த, 54 நாட்களாக அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள், தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. இதையடுத்து, அரசு பஸ்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் ஆகியவை நேற்று சாலையில் வழக்கம்போல் இயங்கத் துவங்கின. பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில், தனியார் பஸ்களும் இயக்கப்பட்டன. பயணியருக்கு, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X