பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் மஞ்சளுக்கு மவுசு 'குர்குமின்' பரிசோதிக்க ஆர்வம்

Added : மே 21, 2020
Share
Advertisement

கோபி : கொரோனா தடுப்புக்கு, கிருமி நாசினியாக, மக்கள் அதிகம் பயன்படுத்தும் மஞ்சளில், 'குர்குமின்' அளவை பரிசோதிக்க, கோபி வேளாண் அறிவியல் நிலையத்துக்கு, விவசாயிகள் வருகை அதிகரித்துள்ளது.

மஞ்சளின் நடுப்பகுதியில், இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள சதைப் பகுதியான, 'குர்குமின்' என்ற வேதிப் பொருளின் அளவை பொறுத்து, அதன் மதிப்பை வியாபாரிகள் நிர்ணயிக்கின்றனர். 'குர்குமின்' அளவை அறிய, கோபி வேளாண் அறிவியல் நிலையமும், எம்.சி., டெக்ஸ் என்ற தேசிய அமைப்பும் இணைந்து, ஆய்வகம் துவங்க முடிவு செய்தன. ஆய்வகங்கள்இதன்படி, 50 லட்சம் ரூபாய் செலவில், பெருந்துறை மஞ்சள் வணிக வளாகத்திலும், கோபி வேளாண் அறிவியல் நிலையத்திலும், 2018 ஜூலை, 21ல், ஆய்வகங்கள் துவங்கப்பட்டன.

விவசாயிகள் கொண்டு வரும் மஞ்சளில், 250 கிராம் மாதிரி எடுத்து, அரைத்து, 'ஹாட் ஏர் ஓவன்' என்ற கருவி மூலம், ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.மேலும், முக்கிய சோதனையாக, 'ஸ்பெக்ட்ரோ போட்டோ மீட்டர்' என்ற அதிநவீன கருவி மூலம், மஞ்சளின் குர்குமின் அளவை பரிசோதித்து, அதன் விபரங்களை, மூன்று நாட்களுக்குள், விவசாயிகளுக்கு அறிக்கையாக வழங்குகின்றனர். இதற்கு, 250 ரூபாய் கட்டணம்.3.2 சதவீதம்கோபி வேளாண் அறிவி யல் நிலைய விஞ்ஞானி ஒருவர் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில், ரோமா, ஸ்வர்ணா, பிரகதி மற்றும் உள்ளூர் ரக மஞ்சளை விவசாயிகள் அதிகஅளவில் பயிரிடுகின்றனர்.

உள்ளூர் மஞ்சளில், குர்குமின் அளவு, சராசரியாக, 3.2 சதவீதம் உள்ளது.மஞ்சளில் குர்குமின் தன்மை அதிகமாக இருந்தால், கிருமியை ஒழிக்கும் தன்மையும் அதிகமாக இருக்கும். கொரோனா தொற்று தடுப்புக்காக, மக்கள் அதிகளவில் மஞ்சள் பயன்படுத்துகின்றனர். இதனால், குர்குமின் அளவை அறிய, தினமும் சராசரியாக, 10 விவசாயிகள் வருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X