சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி பலாத்காரம் போலீஸ்காரர் கைது

Added : மே 21, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
 மாணவி பலாத்காரம் போலீஸ்காரர் கைது

அரூர் : திருமணம் செய்து கொள்வதாக கூறி, 16 வயது மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி மாவட்டம், மொரப்பூரைச் சேர்ந்த, 16 வயது பள்ளி மாணவி, அரூர் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகார்:‍கோவையில் பெற்றோருடன் இருந்து, பிளஸ் 1 படித்து வருகிறேன். 2017 மே, 10ல், சொந்த ஊரில், விடுமுறையில் இருந்தபோது, தர்மபுரி, சேஷம்பட்டியை சேர்ந்த உறவினர் வெற்றிவேல், 27, என்பவர் கட்டாயப்படுத்தி, என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.திருமணம் செய்வதாக கூறியதால், இதை பெற்றோரிடம் கூறவில்லை.

வெற்றிவேலுக்கு போலீசில் பணி கிடைத்ததால், கோவை, போத்தனுார் காவலர் குடியிருப்புக்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார்.கடந்த, ஆறு மாதங்களுக்கு முன், சேஷம்பட்டி வந்த அவர், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஏப்., 29ல், பெற்றோருடன் சென்று, அவரிடம் நியாயம் கேட்டபோது, 'திருமணம் செய்ய முடியாது, முடிந்ததை பார்த்துக் கொள்' என கூறினார். இதற்கு, அவரது தாய், அண்ணன், மாமா உடந்தையாக இருந்தனர். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப் பதிந்து, 'போக்சோ' சட்டத்தில் வெற்றிவேலை கைது செய்தார். வெற்றிவேல், பொள்ளாச்சி போக்குவரத்து பிரிவில், போலீசாக பணிபுரிகிறார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
27-மே-202001:27:45 IST Report Abuse
தமிழ் வேந்தன் போட்டு தள்ளிட்டு போயிட்டே இருக்கணும்
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
22-மே-202010:38:12 IST Report Abuse
Matt P கல்யாணம் பண்ணிக்குவார்ன்னு நம்பி தியாகம் செய்துட்டு அவரை குறை சொல்லி என்ன பலன்/ அவரு செய்தது தப்பு தான். நம்ம பேரிலும் தான் தப்பு இருக்கு. ...கட்டுப்பாடு கடினம். ஆனால் கட்டுப்பாடோடு இருக்க முடியும் .வரம்பை அவன் மீறினால் , அவனை தொந்தர்வுக்குள்ளாக்க முடியும் . காலம் மாறிவிட்டது கலாச்சாரம் மாறிவிட்டது என்று எல்லா நேரங்களிலும் நம் மனம் போக்கிலெல்லாம் போக தேவையில்லை. ...இப்படி இடம் கொடுப்பது எல்லா காலங்களிலும் பெண்களுக்கு தான் அதிகம் பாதிப்பு. அந்த பொண்ணு ஏமாற்றி விட்டது என்று சொல்லும் ஆண்களை விட ஆம்புளை ஏமாற்றிவிட்டான் என்று சொல்லப்படுவது தானே அதிகம். .அதிக அவதி .பெண்களுக்கு தான். .கண்களே பெண்களை நம்பாதே என்று சொல்வார்கள். பெண்களே கண்களை நம்பாதீர்கள் என்று சொன்னாலும் சரி தான். விரும்பி போனோமா விஷயத்தை வெளியே சொல்லாமல் வேறு ஒருவரை கல்யாணம் பண்ணுவதும் சரி தான். வள்ளுவர் சொன்ன மாதிரி நல்லது நடப்பதற்கு.
Rate this:
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
22-மே-202020:36:31 IST Report Abuse
naadodiIt appears to be consensual Then it cannot be termed as a rape. But sex with a minor could be a crime. Of course, these are legal opinions....
Rate this:
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
24-மே-202003:28:19 IST Report Abuse
.Dr.A.Joseph18 வயதுக்கு குறைவான பெண்ணின் சம்மதத்துடன் உறவு கொண்டாலும் அது வல்லுறவே....
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
21-மே-202016:01:31 IST Report Abuse
வாய்மையே வெல்லும் பிராடு பசங்களை ரிவிட்டு அடிக்கணும்.இவரை போக்ஸோ சட்டத்தில் அதிகபட்ச தண்டனை கொடுத்து வேலையை விட்டு நீக்க வேண்டும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X